“கொட்டிய மழையிலும் கருகிய கடைமடைபயிர்கள்”கண்டு 2 விவசாயிகள் தற்கொலை..!!!

Published by
kavitha

பயிர்கள் கருகியதை கண்டு தாங்கமுடியாமல் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வருடம் கர்நாடகா மாநிலத்தில் பெய்த பெருமழையால், காவிரியில் வழக்கத்தை விட இந்தாண்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஆனாலும் அந்நீரானது நாகை மாவட்டமான கடைமடையை எட்டாத சோகத்தில் கடைமடை விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர் .

Image result for CAUVERY

பயிர்கள் கருகிய நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், தலையாமழை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி. 49 வயதான இவர், அதே பகுதியில்,ஆறு ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி முறையில் நெல்விதைப்பு செய்திருந்தார்.

 

வெண்ணாறு பிரிவு பாசன வாய்க்காலான வாழ வாய்க்கால் மூலம் காவிரி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுபோன நிலையில் தண்ணீர் இன்றி ராமமூர்த்தியின் வயல்கள் பாளம் பாளமாக வெடித்தன.30 நாள் சம்பா பயிர்கள், கண்முன்னே கருகியதைக் கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி, பூச்சிமருந்தை குடித்தார்.

இதனையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி ராமமூர்த்தி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல கடந்த 20-ம் தேதி சீர்காழி அடுத்துள்ள ஆதமங்கலம் கிராமத்தில் கர்ணன் என்ற விவசாயி இதே போல் பயிர் கருகியதால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.ஒரே வாரத்தில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரைபுரண்டு ஒடிய நீரிலும் பயிர்கள் கருகி விவசாயிகளின் வாழ்வையும் இருளில் மூழ்கடித்த இந்த அரசு முங்கூட்டியே ஏரிகளையும்,கால்வாய்களையும் தூர்வார தவிர விட்ட அலட்சிய அரசால் 2 விவசாயிகளை நாம் தவறவிட்டுள்ளோம்.இனி எத்தனை விவசாயிகளை தூக்கி கயிற்றில் ஏற்றி அழகு பார்க்க போகிறதோ இந்த அலட்சிய அரசு.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

15 minutes ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

42 minutes ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

1 hour ago

காசா எல்லையில் ஆனந்த கண்ணீர்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாலஸ்தீன மக்கள்!

காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…

1 hour ago

காதலனுக்கு விஷம்… காதலி கிரிஷ்மாவுக்கு மரண தண்டனை!

கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ்  என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா  கடந்த…

1 hour ago

விஜயின் பரந்தூர் பயணம் : மண்டபத்தில் குவிந்த கிராம மக்கள்! தடுத்து நிறுத்தப்பட்ட தவெக தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…

2 hours ago