பெற்ற மகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை! கைது செய்து மகளிர் போலீஸ் விசாரணை!
கடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் அந்த பெண். அந்த பெண்ணிற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது. தற்போது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த அந்த பெண்ணின் தந்தை முகம்மது அலி அண்மையில் வீடு திரும்பினார். வந்தவர் அந்த பெண்ணை கடுமையான வார்த்தைகளால் திட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அந்த பெண் இரவில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது, அவளது தந்தை அந்த பெண்ணை பலவந்தமாக வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் இதனால் அந்த பெண்ணின் தாயார் ஆத்திரமடைந்து தட்டி கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த முகம்மது அலி, தனது மகளையும், மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த பெண், மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து, முகமது அலி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.