சீருடை அணியாத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்!

Default Image

கடலூரில், அரசு பேருந்து நடத்துனராக இருந்தவர் கோபிநாத், இவர் இன்று, கடலூர் அருகே அரசு பேருந்தில் திட்டக்குடி வழி செல்லும் பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். அதே அரசு பேருந்தில் ஓட்டுனராக சாரங்கபாணியும் இருந்துள்ளார். அப்போது திட்டக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துநர் கோபிநாத் டிக்கெட் கேட்டு உள்ளார்.

அப்போது காவலர் பழனிவேல், தான் காவலர் எனவும் அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்ததக கூறப்படுகிறது. ஆனால் கோபிநாத், தாங்கள் காவலர் சீருடை அணியவில்லை. மேலும், காவலர் அடையாள அட்டையை காண்பிக்கும்படி,  கூறியுள்ளார். இதனால் நடத்துனர் கோபிநாத்துக்கும்,  காவலர் பழனிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பேருந்தில் நடந்து உள்ளது.

இந்த வாக்குவாதத்தில் நடத்துநர் கோபிநாத்துக்கும் ஆதரவாக பயணிகளும் காவலர் பழனிவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் நடத்துனர் கோபிநாத் திடீரென்று மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்