தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவும்,
இந்த ஊரடங்கு சமயத்தில் பேரிடா் மீட்பு பணிகளில் அரசியல் பாகுபாடின்றி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும். அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும்.
மேலும், அவசியமான அத்தியாவசியமான கருத்துகள் இருந்தால் இணையதளம் மூலம் முதல்வருக்கு அனுப்பவேண்டும். ஊரடங்கு என்பது அரசியல் நடவடிக்கைகளுக்கும் சேர்த்துதான். என கே.பி.ராமலிங்கம் தெரிவித்து இருந்தார்.
கே.பி.ராமலிங்கம் திமுகவின் விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது அந்த பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…