#BREAKING: கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ.., ‘Madan Diary’ யூ டியூப் சேனல் முடங்கியது..!
கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூ டியூப் சேனல் முடங்கியது.
பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார்.
மதன் ரவிச்சந்திரன் என்ற யூ-டியூபர் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிட்டார். அவர் நடத்தி வரும் ‘Madan Diary’ என்ற யூ-டியூப்பில் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லித்தான் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும், அது தொடர்பான வாட்ஸ்ஆப் ஸ்கிரீன்ஷாட்டையும் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
பாஜகவில் உள்ள பல தலைவர்களின் வீடியோக்களும் இனி வரும் நாள்களில் வெளியாகும் என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்த நிலையில், மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூ டியூப் சேனல் முடங்கியது. கடந்த ஆண்டு அக்போடர் மாதம் மதன் ரவிச்சந்திரன் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.