மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லையா.?! நீதிபதி கே.சந்துரு கொடுத்த பதிலடி.!
மிசா சட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று கூறுவது தவறானது. அது சீதையை ராமன் சந்தேகப்பட்டு சீதையை தீயில் இறங்கச் சொன்னதுபோல இருக்கிறது.
மிசா சட்டம் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட்ட அவசரநிலை சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ், தமிழக்த்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர்.
இது குறித்து விமர்சனம் ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்துள்ளார். அவர் கூறுகையில், ‘ பாஜக தொண்டர்கள் என்றைக்கும் சிறைக்கு செல்வதற்கு அஞ்சுபவர்கள் அல்ல . முதல்வர் ஸ்டாலின் தான் சிறைக்கு செல்ல அச்சப்படுபவர். மிசா வழக்கில் ஸ்டாலின் கைது செய்யப்படவே இல்லை. ஆனால் மிசாவில் கைது செய்யப்பட்டதாக பொய் கூறுகிறார்.’ என குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நீதிபதி கே.சந்துரு. அவர் கூறுகையில், ‘ மிசா சட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று கூறுவது தவறானது. அது சீதையை ராமன் சந்தேகப்பட்டு சீதையை தீயில் இறங்கச் சொன்னதுபோல இருக்கிறது .’ என குறிப்பிட்டுள்ளார்.