சென்னையில் கே.பாலசந்தர் நினைவு ‘சதுக்கம்’.. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.!!

மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் நினைவாக சென்னையில் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.
சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த பிரபல இயக்குனரான கே.பாலச்சந்தர் நினைவாக, சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் உள்ள காவிரி மருத்துவமனை அருகில் 1,000 சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவு இடத்திற்கு கே.பாலச்சந்தர் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஏற்கனவே மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அவ்வை சண்முகம் சாலை வி.பி.ராமன் சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மறைந்த பிரபல இயக்குனரான கே.பாலச்சந்தர்க்கு 1,000 சதுர அடியில் சதுக்கம் ஏற்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025