திமுக பொதுச்செயலாளர் மறைவு… ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி… பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கள்…
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன்(97) உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்று மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் க. அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்து, நேற்று நள்ளிரவு சரியாக 1 மணியளவில் அவரது உயிர்பிரிந்தது. இதனை மருத்துவனை நிர்வாகம் உறுதி செய்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோபுறப்பட்டு சென்றார். அவருடன் திமு கழகத்தின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் உடன் சென்றனர்.
திமுக உடன்பிறப்புகள் அஞ்சலி:
மருத்துவமனையில் பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.மேலும், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆராசா, கனிமொழி, கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பேராசிரியர் க. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி:
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில், புதுச்சேரி முதல்வல் நாராயணசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் இரங்கல் தெரிவிததுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)