தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்விட்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது கோரிக்கையை ஏற்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு!
மாண்புமிகு. உயர் கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களைச் சந்தித்து அரவக்குறிச்சி,மணப்பாறை, விராலிமலை சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். பிறகு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமும் இந்த வேண்டுகோளை முன்வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று மணப்பாறை, அரவக்குறிச்சி தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்களுக்கும் அரவக்குறிச்சி, மணப்பாறை தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…