முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஜோதிமணி எம்.பி…!

Default Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வருக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வருக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தை இணைத்து, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மாநில வளர்ச்சி,ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ( Disha Committee) அமைக்கப்படவில்லை.இதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். உடனடியாக நடவடிக்கை எடுத்து குழுவை அமைத்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்