சிறார் குற்ற வழக்கு – போலீஸ் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!
சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளை போலீஸ் தொடர்வது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி.
குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும், சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகள் தொடர்கிறது என போலீஸ் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிறார் வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு, மாணவன் தாலி கட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரம் குறித்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து ஆணையிட்டுள்ளது.