#Justnow:ஒற்றை தலைமை – இன்று தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆலோசனையா?..!

Default Image

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதன்காரணமாக,சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த ஆலோசனையில்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பின்னர்,ஓபிஎஸ்-வுடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்:”அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

admk

இந்நிலையில்,சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் தனியாக இன்று ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,ஓபிஎஸ் தரப்பில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஆனால் இருவரும் சேர்ந்து அழைத்தால்தான் தாங்கள் வருவோம் என்று சில மாவட்ட செயலாளர்கள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.அதே சமயம்,ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,23-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் கொண்டு வரக்கூடிய தீர்மானங்கள் குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக்குழு இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்