தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து,10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (24-ம் தேதி) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பள்ளிகள் வாயிலாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.இதனிடையே,11 ஆம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,மாநில அதிகார வரம்பின்கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேல்நிலை மாணவர் சேர்க்கையில் கட்டாயம் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,பொதுப்பிரிவில் 31%,எஸ்டி(ST) பிரிவில் 1%,எஸ்சி(SC) பிரிவில் 18%,எம்பிசி(MBC) பிரிவில் 20%,பிசிஎம்(BCM) 3.5% மற்றும் பிசி பிரிவில்(BC) 26.5% இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும்,மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும்,அனைத்து பிரிவினருக்கும் ஏற்றாற்போல் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும்,குறிப்பாக இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா? என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.எனினும், சிறுபான்மை பள்ளிகளுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,தனியார் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்துமா? என்று தெரிவிக்கப்படவில்லை.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…