#Justnow:அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? – ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

Default Image

வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆனால், பொதுக்குழுவுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி முன் ஓபிஎஸ் முறையீடு செய்தார்.

அதன்படி,பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக இரு தினங்களுக்கு முனர்தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாகவும்,எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க அவசர வழக்காக இதனை எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று நேற்று அதனை விசாரிப்பதாக தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்திருந்தார்.

இதனையடுத்து,அதிமுக பொதுக்குழு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால்,வேறு நிவாரணங்களைப் பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது என்றார். இதனிடையே,குறுக்கிட்ட நீதிபதி,வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதற்கு,பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதான் கோரப்பட்டுள்ளது என்றும்,
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம்
விளக்கமளித்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து,ஈபிஎஸ் தரப்பு பதில்மனு தாக்கல் செய்யப்பட்டும்,வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்தால் என்ன?என்றும் நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில்,பொதுக்குழு திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் இன்றே(ஜூலை 6) விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது.ஆனால்,உடனடியாக விசாரித்து உத்தரவிடுங்கள் என நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு,வழக்கை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் விசாரிக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்