#Justnow:எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்;இவர்களுக்கு முன்னுரிமை – பள்ளிக்கல்வித்துறை முடிவு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்ட நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில்,”அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் செயல்படும். எனவே,தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை சேர்த்துக் கொள்ளலாம்.ஏற்கனவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1-5 ஆம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர்”, என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அதன்படி,2,381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கவுள்ள எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 2,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில்,DEE Teacher Training courses படித்த பெண்களுக்கு சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.