#JustNow: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!
நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இன்று மத்திய சாப்பாடு, பருப்புக்குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதன்பின் உடல்நல குறைவு ஏற்பட்ட காரணமாக 26 மாணவிகளும் ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும், பள்ளியில் வேறு யாருக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும், லேசான அலர்ஜி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.