#JustNow: அடுத்த போட்டி…பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Default Image

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி கடிதம்.

அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அதில், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் காட்டிவரும் ஆர்வத்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று. 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், போட்டிகளை நடத்த தேவையான உத்தரவாதங்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளது. 2022 செப்டம்பருக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உத்தரவாதங்களை வழங்கப்பட வேண்டி உள்ளதால் விரைவில் அனுமதி வழங்கிட வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்