படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை, மீன்வளம், பால்வளம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 4 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், கட்சத்தீவை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்றும் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகள் மற்றும் 23 மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமை மீட்கப்பட வேண்டும் எனவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…