#JustNow: TANCET தேர்வு – நாளை மறுநாள் ஹால் டிக்கெட் வெளியீடு!

Default Image

நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை https:/tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அந்தவகையில், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு TANCET எழுத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் BE / B.Tech முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், TANCET தேர்வுக்கு 36,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். TANCET தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

tancet

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்