#JustNow: இந்தி திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது – மாநில தலைவர் அண்ணாமலை
இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை பேட்டி.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய பல்கலைகலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கான வாட் வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. பாஜகவும் இந்தி திணிப்பை விரும்பவில்லை. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது. தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று. இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்றால் தமிழ் பள்ளிகளை திறக்க மாநில முதல்வர்களுக்கு அரசு கடிதம் எழுத வேண்டும் என்றும் தெரிவித்தார்.