#JustNow: சுவாதி கொலை வழக்கு – இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி!
சென்னை நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி.
சென்னை நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதியின் பெற்றோர் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.3 கோடி இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்களின் மகன் சுவாதி இறப்புக்கு ரூ.3 கோடி இழப்பீடு கோரி தாய் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரயில்வே நிர்வாகம், பாதுகாப்பு படையின் அலட்சியத்தால் தான் தனது மகள் உயிரிழந்ததாக மனுவில் தாய் புகார் தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்குகிறது. சுவாதியின் கொலை திட்டமிட்ட சம்பவம் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சுவாதி வழக்கில் இழப்பீடு கோரி சிபில் வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பொறியாளர் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் ராம்குமார் என்பரை போலீஸ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. சிறையில் ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.