#JustNow: ஆ.ராசாவுக்கு எதிராக கையெழுத்து..போலி வழக்குகளில் பாஜக தொண்டர்கள் கைது – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

ஆ.ராசாவின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் போலி வழக்குகள் பதியப்பட்டு பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக சர்ச்சை பேச்சுக்களை பேசி வருகின்றனர். திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியை பார்த்து தமிழக மக்களுக்கு கோபம் எல்லை கடந்து போய்விட்டது.

சனாதனம் குறித்த ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் நடத்தாது. இதுபோன்ற எம்.பி மக்களிடையே வேண்டாம் என கையெழுத்து இயக்கம் மட்டும் நடத்துவோம். அதன்படி, ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆ.ராசாவுக்கு எதிராக 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கையெழுத்துவிட்டனர். சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதத்தில் எந்த கொள்கையும் கிடையாது.

காலங்களை கடந்து அழிவை சந்திக்காத தர்மம் சனாதன தர்மம். சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதம் எந்த காலத்திலும் செயல்பட்டது கிடையாது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ள சனாதன தர்மம் பற்றி அ.ராசாவுக்கு தெரியாது. ஆ.ராசா பேச்சால் சமுதாயாத்தில் பிளவு ஏற்படாதாம், அதனை கண்டித்து பேசினால் பிளவு ஏற்படுமாம், வேடிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய அண்ணாமலை, சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்கவே ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சை திமுக அனுமதிக்கிறது. இந்து என்பது மதமே கிடையாது. இந்து என்பது வாழ்வியல் முறை, ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…

11 minutes ago

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

22 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

16 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

16 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

17 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

17 hours ago