தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது என நேற்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, ஷாப்பிங் மால்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் 100 பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை தொடரும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,இன்று வெளியிட்ட அரசாணையின் படி, வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனிமனித இடைவெளி அவசியம் மட்டுமில்லமால் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…