#JustNow: கஞ்சா விற்பனை; 1450 வங்கிக்கணக்குகள், ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

Default Image

கஞ்சா விற்பனை தொடர்பாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கம்.

கஞ்சா விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது என்று தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஜி, கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 3 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதிவான 8 வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.

அதன்படி, 31 வீடுகள், 19 மனைகள், நிலங்கள், 5 கடைகள் மற்றும் 18 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறினார். கஞ்சா விற்பனையை தடுக்க முன்னெச்சரிக்கையாக 1,000 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டது. கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கண்டறிந்து நன்னடத்துக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மேலும், கூடலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எருமாடு காவல் நிலைய காவலர் அமரன் கைது செய்யப்பட்ட நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் உடையார், விவேக் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் ஐஜி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்