#JustNow: நிவாரண நிதி உயர்வு – வணிகர்களுக்கான சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
திருச்சியில் வணிகர் சங்க மாநாட்டில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வணிகர்களுக்கான சலுகைகளை அறிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தையொட்டி இன்று திருச்சியில் நடைபெற்று வணிகர் விடியல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி முதல்வர், வணிகர்களுக்கான சலுகைகளையும் அறிவித்தார்.
அதில், வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூ.5000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு உதவிய வணிகர்களை பாராட்டுகிறேன் என்றும் கூறிய முதலமைச்சர், வணிகர்களுக்கு தொந்தரவு கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.