#JustNow: தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை – எதிரான மனு தள்ளுபடி!
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டதிருத்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புழல் உதவி சிறை அதிகாரி ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 10ம் வகுப்புவரை தமிழிலும், 11, 12ம் வகுப்பை கேரளாவில் ஆங்கில வழி கல்வியில் படித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, அரசியல் சட்டத்திருத்தம் தங்களை போன்றோரின் அடிப்படை உரிமையை பாதிப்பதால் செல்லாது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அனைத்து நிலையிலும் தமிழ் வழியில் படித்திருந்தால்தான் 20% ஒதுக்கீடு வழங்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பணிக்கு தகுதியுடைய படிப்பு படிக்கும்வரை அனைத்து நிலையிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த புழல் உதவி சிறை அதிகாரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.