#JustNow: பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
இந்தியாவில் PFI அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான அரசாணை வெளியீடு.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுக்கு தடை செய்த நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது.
இந்த சோதனையின்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என கூறி 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை மத்திய அரசு முடக்கிய நிலையில், அந்த அமைப்புக்கு தொடர்புடைய சமூக வலைத்தளங்களையும் முடக்க உத்தரவிட்டது.
இந்த சமயத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் நேற்று அறிவித்திருந்தார். நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் PFI அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தை தடை செய்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள துணை ஆணையர்கள் முழு உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னையில் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டிருந்தர்.
இந்தியாவில் PFI அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தை தடை செய்து அரசாணை வெளியீடு.#PFICrackdown | #PFI | #TamilNadu #PopularFrontofIndia pic.twitter.com/vQWikeYMEI
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 29, 2022