அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த பிரத்யேக கைபேசி செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அவர், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்தார். சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை திருமங்கலத்தில் இருந்து அவதிக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் கூறினார்.
மேலும், அரசாங்கத்தின் பணிகளில் நீதிமன்றம் அநாவசியமாக கை வைக்கக்கூடாது. நீதிமன்ற தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. நீதித்துறை, அரசாங்கம், சட்டமன்றம் ஆகியவற்றின் எல்லை தெளிவு இல்லாமல் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமையும், அதிகாரிகளும் சரியாக அமையவில்லை எனவும் குற்றசாட்டினார்.
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…