#Justnow:மாற்றுதிறனாளிகளுக்கான இல்லப் பரமாரிப்பு திட்டம் – தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
மாற்றுதிறனாளிகளின் அமைச்சராக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உள்ள நிலையில்,ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் முதல்வர் அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அந்த வகையில்,திருவண்ணாமலை சென்றுள்ள முதல்வர் கீழ்பெண்ணத்தூர் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் வீட்டிற்கு நேரில் சென்று உரையாடி,அச்சிறுவனுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து,சற்று நேரத்தில் திருவண்ணமலையில், மாற்றுதிறனாளிகளுக்கான இல்லப் பராமரிப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அதன்படி,இத்திட்டத்தின் மூலம் 52 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.87 லட்சம் செலவில் இணைப்பு சக்கரங்களுடன் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்,முதுகு தண்டுவட பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு ஸ்கூட்டர்கள்,மோட்டார் பொருத்தப்பட்ட 19 நவீன தையல் இயந்திரம்,46 நவீன கைப்பேசிகள் வழங்கப்படுகிறது.
மேலும்,தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் நலவாரியத்தின் மூலம்,இயற்கை மரணமடைந்த ஒரு மாற்றுதிறனாளியின் குடும்பத்துக்கு ஈமைச்சடங்கு உதவித்தொகை ரூ.17 ஆயிரம் வழங்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல்,கல்வி உதவி தொகை,நலவாரிய விபத்து மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது.