நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கைது என தகவல்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர்.இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் காரை நிறுத்தி பாஜகவினர் அராஜகம் செய்ததாக கூறப்படுறது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீசிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினர் காலனி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ராணுவ வீரர் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் கூறியதால் பிரச்சனை என ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அமைச்சர் சென்றபோது காரை நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு காலனி வீசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காலனி வீசிய சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்து அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…