#JustNow: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை.
சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உத்தரவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் ரங்கநாதன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.