#JustNow: ஆகஸ்ட் 7ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.