#JustNow : கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் – களமிறங்கும் கமலஹாசன்..!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமலஹாசன் பரப்புரை
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது.
கர்நாடகா தேர்தல் பரப்புரையில் களமிறங்கும் கமலஹாசன்
அந்த வகையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமலஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
கமலஹாசன் கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பரப்பரை மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று காலை திரு. ராகுல் காந்தி அவர்கள் தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் திரு. டி.கே.சிவக்குமார் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நம்மவர் பிரச்சாரம் செய்ய அழைப்புக்கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தலில் பரப்புரைக்காக தலைவர் நம்மவர் @ikamalhaasan அவர்களுக்கு திரு.@RahulGandhi அழைப்பு!@INCTamilNadu #MakkalNeedhiMaiam #KamalHaasan pic.twitter.com/CPkHAZ71Zw
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 28, 2023