அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில குழந்தைகள் நல ஆணையர் பேட்டி.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது என்று மாநில குழந்தைகள் ஆணையர் நல சரஸ்வதி தெரிவித்துள்ளார். கடந்த 13ம் தேதி மாணவி இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாநில குழந்தைகள் நல ஆணையர் இன்று விசாரணை மேற்கொண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியுள்ளது. முறையான அனுமதி பெறாத விடுதியில் 24 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி பள்ளி விடுதி இயங்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என கூறினார். மேலும், முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும். எந்த வழக்காக இருந்தாலும், சிறார்களின் புகைப்படம், பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…