#JustNow: IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதி மாற்றம்!
IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு (அக்டோபர்-2022 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு) நடைபெறும் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபருக்கு பதில் நவம்பர் 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் விரிவான அட்டவணை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2022 அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் மொழித் தேர்வுகள் தொடர்பான எழுத்துத் தேர்வுகள் மற்றும் வாய்மொழித் தேர்வுகள் 11.10.2022 முதல் 15.10.2022 மற்றும் 20.10.2022 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையம் அறிவித்திருந்தது. நிர்வாகக் காரணங்களால், அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் மொழித் தேர்வுகள் அக்டோபர் 2022 (தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியப் பணிகள் (I.A.S., I.P.S. மற்றும் I.F.S.) மற்றும் மாநிலப் பணிகளுக்கான) எழுத்துத் தேர்வுகள் மற்றும் வாய்மொழித் தேர்வை ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், அரையாண்டுத் எழுத்துத் தேர்வுகள் மற்றும் மொழித் தேர்வுகள் நவம்பர் 1 முதல் 5 மற்றும் 10 வரை. அக்டோபர் 2022 அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் மொழித் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை ஆணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியீடு செய்யப்பட்டுள்ளது.