#JustNow: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை – வானிலை மையம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்றும், நாளையும் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை.
வங்கக்கடலின் தென்மேற்கு பகுதி மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை திருப்பூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காவிரி டெல்டா மாவட்டங்களிலும், அதையொட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 11-ல் தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரி, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஏப்ரல் 12-ல் தென் மாவட்டங்கள், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாலை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 13-ல் கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசியில் மிதமான மாலை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோர பகுதி, மன்னர் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.