#JustNow: அரசு காப்பீட்டு திட்டம் – பயன்படுத்தப்படாத ரூ.2,368 கோடி.. அதிர்ச்சியூட்டும் தகவல்!

Default Image

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மக்களுக்கு எந்தவித பயன்படும் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2,368 கோடி வருவாய்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி நிதி மக்களின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படாமல், காப்பீட்டு நிறுவனங்களுக்கு (Insurance companies) வருவாயாக அதாவது லாபமாக சென்றுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. கடந்த 2009 – 2021 வரை காப்பீட்டு திட்ட பிரீமியமாக ரூ.10,706 கோடியை தமிழ்நாடு அரசு செலுத்தியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

2016-17-ல் ரூ.928 கோடியாக இருந்த பிரீமியம் தொகை அடுத்த ஆண்டே ரூ.1,733 கோடியாக அதிகரித்து செலுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,736 கோடி, அரசு மருத்துவமனைகளில் ரூ.2,602 கோடி நிதி காப்பீட்டின் கீழ் கிளைம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகளில் மட்டுமே ரூ.2,368 கோடி வரை மக்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களுக்கு லாபமாக சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் மருத்துவ காப்பீட்டு விவகாரத்தில் முறைகேடு அல்லது மோசடி ஏதும் நடைபெற்று உள்ளதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் நேரடி கண்காணிப்பில் ஒரு சிறப்பு தணிக்கை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ஒரு ஆண்டில் இருந்து மற்றொரு ஆண்டில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை 10 முதல் 20% வரையே உயருகிறது. அதற்கு ஏற்ப காப்பீட்டின் தொகையும் 10 முதல் 20% மட்டுமே அதிகமாக செலுத்தப்பட்டியிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2017, 18 நிதியாண்டில் இருந்து கிட்டத்தட்ட 90% நிதி என்பது செலுத்தப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. எதற்காக 90% நிதி அதிகமாக காப்பீடு செய்யப்பட்டுள்ளது, இதை மக்களுக்கு பயன்படுத்தாமல் காப்பீட்டு நிறுவனங்களுக்கே லாபமாக சென்றிருப்பது ஏன் என பல்வேறு கேள்விகள் இதன் மூலமாக எழுகிறது. இதில் உடனடியாக முதலமைச்சர் தலையிட்டு, தனி குழு ஒன்றை அமைத்து தணிக்கை செய்ய வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் இதில் குறிப்பாக தனியார் மருத்துவமனைகள் மூலமாக மருத்துவ காப்பீட்டு தொகை அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மூலமாக குறைந்த அளவில் காப்பீடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்