#JustNow: அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! – ஓய்வு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்!
ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டு, தற்போது 60 ஆக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் எந்த நாள் ஒய்வு பெற வேண்டுமோ, அந்த நாளில் இல்லாமல், அந்த மாதத்தின் கடைசி நாளில் ஒய்வு பெறுவார்கள் என ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. எனவே, அடிப்படை விதி 56(1)ன் படி உயர்நிலைப் பணியிலும், அடிப்படைப் பணியிலும் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் ஓய்வுபெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.