#JustNow: உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் – டிடிவி
தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் நம்பிக்கை.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என்பதுதான் எங்களின் கோட்பாடு. தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம். கடந்த காலங்களில் தேர்தல் வெற்றி, தோல்விகளை கடந்து வரும்காலத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செயல்படுவோம்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறி வருகிறது. திமுக ஆட்சி தவறான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக சிலர் இருப்பார்கள். அந்த கட்சி ஆளும் கட்சியாக இல்லாமல் போனால், அதற்கு எதிராக மாறுவார்கள், அதில் திரைத்துறையினரும் விதிவிலக்கு அல்ல என தெரிவித்தார். மேலும், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என விகே சசிகலாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார்.