#JustNow: டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை!
இரட்டை இலை சின்னத்தை பெற சட்டவிரோதமாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தினகரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அந்தவகையில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே, கடந்த 12-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இன்றும் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.