பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழக வந்துள்ள ஜேபி நட்டா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காரைக்குடியில் சென்றுள்ள ஜேபி நட்டா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ராமநாதசுவாமியின் அருளை பெற்ற தெம்பில் உள்ளேன்.
இலக்கியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்திற்கு வந்துள்ளேன். கடந்த 2 நாட்களில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டுள்ளேன். வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று தெரிவித்தார்.
திமுக அரசு தமிழ்நாட்டில் மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது என்றும் திமுக அரசு தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறது எனவும் குற்றசாட்டிய அவர், வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து அரசியல் செய்து வருகிறது திமுக எனவும் விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். திமுக அரசு மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது என்றும் கூறினார்.
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…