#Justnow:சசிகலாவுக்கு அமைச்சர் பதவி;கைகோர்த்த திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம்!

Published by
Edison

சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்த நிலையில்,நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே,அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கட்சிக்கு சசிகலா தலைமை ஏற்க வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.மேலும்,இது தொடர்பாக பல பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,சசிகலா தலைமையிலான அதிமுகவுடன்,அண்ணா திராவிடர் கழகத்தை அக்கட்சி நிறுவனர் திவாகரன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்,அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் அக்கட்சியின் நிறுவனர் திவாகரன் இணைத்துள்ளார். முன்னதாக,கடந்த 2018-ம் ஆண்டு சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார்.ஆனால், அக்கட்சியில் தனது பெயரையோ,படத்தையோ பயன்படுத்தக்கூடாது என சசிகலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.இதைத்தொடர்ந்து,சசிகலா இனி தனது சகோதரி இல்லை’ என திவாகரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,சசிகலா தலைமையிலான தாய் கழக அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது,சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் அக்கட்சியின் நிறுவனர் திவாகரன் இணைத்துள்ளார்.மேலும்,அண்ணா திராவிடர் கழகம் சார்பில் சசிகலாவுக்கு செங்கோல் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,மேடையில் பேசிய திவாகரன்:”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,சசிகலாவுக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார்.ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக சசிகலா இருந்தார்.கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ? அது போல் தான் சின்னம்மா”,என்று கூறினார்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

44 minutes ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

3 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

4 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

4 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

5 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

5 hours ago