#JustNow: ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள்! – தமிழக அரசு அறிவிப்பு
வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் 2 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு, 44வது செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்க்க வாய்ப்பளிக்கப்படும் என கூறியுள்ளனர். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணர்வகள் https://prs.aicf.in/players -இல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நாட்கள் நடைபெறும் போட்டியை 9 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பல ஊர்களுக்கு ஜோதி எடுத்து செல்வது போல, இந்தாண்டு முதல் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பும் ஜோதி எடுத்துச்செல்ல அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.