#JustNow: விசாரணையின்போது ஒழுங்கீனம் – வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிப்பு!
விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்த உயர்நீதிமன்றம்.
காணொளி வாயிலாக விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொளி விசாரணையின்போது பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவரை வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே 34 நாட்களாக சிறையில் இருந்து வருவதால் தண்டனையை கழித்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யவும் ஆணையிட்டுள்ளது. தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கொரோனா காலகட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது தனி நீதிபதிகளுக்கு முன்பு வேறு வழக்கு விசாரித்து வந்தபோது, இந்த வழக்கில் காணொளி வாயிலாக ஆஜரான வழக்கறிஞர், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.