வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது . இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் இருக்க வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் இரு நபருக்கு இடையே 6 அடி இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். வணிக வளாகங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் நுழையும்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதேபோல் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இறப்பு நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…