தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே,சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால்,கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளதாகவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்,நேற்று வரை சென்னை ஐஐடியில் 1676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில்,நாளைக்குள் சென்னை ஐஐடியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும்,கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால நாளை முதல் கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…