இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.
சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிகளை இன்று பிரம்மாண்டமாக அரசு நடத்த உள்ளது.
அதன்படி, செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது.
இதற்காக 5 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று மூடப்பட்டது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் 2ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…