#JustNow: செஸ் ஒலிம்பியாட் – 4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!

Default Image

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.

சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை  நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிகளை இன்று பிரம்மாண்டமாக அரசு நடத்த உள்ளது.

அதன்படி, செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது.

இதற்காக 5 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று மூடப்பட்டது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் 2ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்