#JustNow: பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி!
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை அமைக்க முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பின் அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மீனவ மக்கள் அதிகம் பங்கேற்கும் வகையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்று இடங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, கலைஞர் நினைவாக மெரினா கடலில் 360 மீட்டர் உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் அமைத்து பேனா நினைவு சின்னத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.