#JustNow: ஆட்டோ கட்டணம் நிர்ணயம் – வரும் 13ம் தேதி ஆலோசனை!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை.
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 13ம் தேதி) நடைபெறும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில், ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். இதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், அதற்கு பின்னர் ஆட்டோ மீட்டர் கட்டணம் முறையாக பொதுமக்களிடம் வசூலிக்கவில்லை என புகார்கள் எழுந்திருந்தது. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில், ஆட்டோ மீட்டர் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.
முறையாக கட்டணம் நிர்ணயம் செய்து, முறையாக கட்டண வசூலிக்கப்படுகிறதா என்பதை குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025